ஜப்பானில் தேர்தல் – பிரதமர் அறிவிப்பு

ஜப்பானில் தேர்தல் – பிரதமர் அறிவிப்பு

ஜப்பானிய பிரதமர் சானே தக்காயிச்சி (Sanae Takaichi) எதிர்வரும் வெள்ளிக்கிழமை நாடாளுமன்றத்தைக் கலைத்து தேர்தலை நடத்த உள்ளதாக அறிவித்துள்ளார்.

தேர்தல் எதிர்வரும் பிப்ரவரி 8ஆம் திகதி நடைபெறும் என்றும் தேர்தல் பிரசாரம், இம்மாதம் 27ஆம் திகதி தொடங்கக்கூடும் எனவும் அவர் கூறியுள்ளார்.

தக்காயிச்சி தலைமையிலான ஆளும் மிதவாத ஜனநாயகக் கட்சி ஜப்பானில் நீண்ட காலமாக ஆட்சி புரிந்து வருகிறது.

இருப்பினும், அந்தக் கட்சி அடிக்கடி தலைமைத்துவ மாற்றங்களைச் சந்தித்து வந்துள்ளது.

கடந்த ஒக்டோபர் மாதத்தில் பிரதமர் பொறுப்பை ஏற்ற தக்காயிச்சி, தாம் அந்தப் பதவிக்குத் தகுதியானவரா என்பதை நாட்டு மக்களிடம் நேரடியாக கேட்க விரும்புவதாக தெரிவித்துள்ளார்.

மேலும், தனது வரவு-செலவுத் திட்டங்களுக்கு மக்களின் ஆதரவைப் பெறும் நோக்கிலும் இந்தத் தேர்தல் அறிவிப்பை வெளியிட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )