
விதிகளை மீறிய 03 மருந்தகங்களுக்கு அபராதம்
தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல் அதிகாரசபையின் விதிமுறைகளை மீறி இயங்கி வந்த மூன்று தனியார் மருந்தகங்களுக்கு கல்கமுவ, நிக்கவெரட்டிய மற்றும் பிலஸ்ஸ நீதவான் நீதிமன்றங்களினால் 950,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
வைத்தியரின் பரிந்துரைச் சீட்டு இன்றி மருந்துகளை விற்பனை செய்தமை, அனுமதிப்பத்திரம் இன்றி மருந்தகத்தை நடத்தியமை மற்றும் தகுதிவாய்ந்த மருந்தாளர் இன்றி மருந்தகத்தை இயக்கியமை ஆகிய குற்றச்சாட்டுகள் தனித்தனியாக நீதிமன்றத்தில் முன்வைக்கப்பட்டன.
இதனையடுத்து, இந்த குற்றச்சாட்டுகளை ஏற்றுக்கொண்ட நிக்கவெரட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த மருந்தகத்திற்கு 3 இலட்சம் ரூபாய் அபராதமும், அம்பகோட்டே, தல்கஸ்பிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த மருந்தகத்திற்கு 5 இலட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது.
மேலும், குற்றத்தை ஒப்புக்கொண்ட கல்கமுவ பிரதேசத்தைச் சேர்ந்த மற்றுமொரு மருந்தகத்திற்கு 150,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
