
இறக்குமதி பால்மா விலை குறைப்பு
இறக்குமதி செய்யப்படும் பால்மாவின் விலையை குறைப்பதற்கு பால்மா இறக்குமதியாளர்கள் இணக்கம் தெரிவித்துள்ளதாக வர்த்தக அமைச்சு அறிவித்துள்ளது.
இதன்படி 1 கிலோகிராம் பால்மா பொதியொன்றின் விலை 125 ரூபாவினால் குறைக்கப்படவுள்ளது.
அத்துடன் 400 கிராம் பால்மா பொதியொன்றின் விலையை 50 ரூபாவினால் குறைப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் 16 ஆம் திகதி முதல் இந்த புதிய விலை அமுலாகும் என வர்த்தக அமைச்சு அறிவித்துள்ளது.
CATEGORIES இலங்கை
