ஜனாதிபதி இன்று வடக்கிற்கு விஜயம்

ஜனாதிபதி இன்று வடக்கிற்கு விஜயம்

மன்னார் மற்றும் யாழ்ப்பாணத்தில் நடைபெறும் பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இன்று (15) மற்றும்
நாளை (16) வடக்கிற்கு விஜயம் மேற்கொள்கிறார்.

யாழ்ப்பாணம் வேலணை ஐயனார் கோவில் விளையாட்டு மைதானத்தில் இன்று (15) பிற்பகல் 2 மணிக்கு நடைபெறும் வட மாகாண தைப்பொங்கல் விழாவில் பங்கேற்கும் ஜனாதிபதி, சுற்றுலாத் துறையை மேம்படுத்துவதற்காக யாழ்ப்பாண சுற்றுலா சபையால் மானிப்பாய் மருதடி விநாயகர் கோவிலில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள தைப்பொங்கல் விழாவிலும் பங்கேற்க உள்ளார்.

‘தமக்கென ஒரு இடம் – அழகான வாழ்க்கை’ என்ற தொனிப்பொருளின் கீழ் நாடு முழுவதும் 31,218 புதிய வீடுகளை நிர்மாணிக்கும் வேலைத்திட்டம் உட்பட, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் யுத்தத்தினால் இன்னும் வீடுகளின்றி உள்ள 2,500 குடும்பங்களுக்காக வீடுகளை நிர்மாணிக்கும் வேலைத்திட்டத்தின் ஆரம்ப நிகழ்வு, ஜனாதிபதி தலைமையில் நாளை (16) முற்பகல் 9 மணிக்கு யாழ்ப்பாணம், சாவகச்சேரி வீரசிங்கம் ஆரம்பப் பாடசாலை மைதானத்தில் நடைபெறும்.

மேலும், போதைப் பொருள் அச்சுறுத்தலை ஒழிப்பதற்கான ‘முழு நாடுமே ஒன்றாக’ தேசிய செயற்பாட்டின் வட மாகாண நிகழ்ச்சித் திட்டம் நாளை பிற்பகல் யாழ்ப்பாணம் தொழில்நுட்பக் கல்லூரி விளையாட்டு மைதானத்தில் ஜனாதிபதியின் தலைமையில் நடைபெற உள்ளது.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )