Dambulla Bustaurant ஆரம்பம்

Dambulla Bustaurant ஆரம்பம்

தம்புள்ளை மற்றும் சீகிரியா பகுதிகளுக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளுக்கு புதிய அனுபவத்தை வழங்கும் நோக்கில் “Dambulla Bustaurant” என்ற புதிய பேருந்து சேவை இன்று ஜனவரி 15, 2026 முதல் தம்புள்ளை, பெல்வெஹெரவில் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.

இங்கு, சுற்றுலாப் பயணிகளுக்கு உணவக வசதிகளை அனுபவித்துக்கொண்டே தம்புள்ளை மற்றும் சீகிரியா பகுதிக்குள் பயணிக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இந்தப் பேருந்து பெல்வெஹெரவிலிருந்து தனது பயணத்தைத் தொடங்கி திகம்பத, கிம்பிஸ்ஸ, சீகிரியா, இனாமலுவ வழியாக பெல்வெஹெரவுக்குத் திரும்ப திட்டமிடப்பட்டுள்ளது.

சுற்றுலாப் பயணிகளுக்கு இது புதிய அனுபவத்தை தரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )