
தாய்லாந்தில் ஓடும் ரயிலில் கிரேன் விழுந்ததில் 22 பேர் பலி
தாய்லாந்து தலைநகர் பேங்காக்கில் ரயில் தடம் புரண்டதில் குறைந்தது 22 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த விபத்தில் 30 பேர் காயமடைந்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
பாங்காக்கிலிருந்து வடகிழக்கு தாய்லாந்திற்குச் சென்ற ரயில், பெட்டி ஒன்றின் மீது கட்டுமான கிரேன் விழுந்ததால் இந்த விபத்து நேர்ந்துள்ளதாக AFP செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
“இருபத்தி இரண்டு பேர் உயிரிழந்துள்ளதுடன், 30க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்” என்று நக்கோன் ராட்சசிமா மாகாணத்தின் உள்ளூர் பொலிஸ் தலைவர் தச்சாபோன் சின்னவோங் தெரிவித்தார்.
பேங்காக்கிலிருந்து வடகிழக்கே 230 கிலோமீட்டர் (143 மைல்) தொலைவில் உள்ள நக்கோன் ராட்சசிமா மாகாணத்தின் சீகியோ மாவட்டத்தில் இன்று காலை இந்த விபத்து நிகழ்ந்தது.
உள்ளூர் ஊடக அறிக்கையின்படி, அதிவேக ரயில் திட்டத்தில் பணிபுரிந்து கொண்டிருந்த ஒரு கிரேன் விழுந்து, ரயிலில் மோதியதால், ரயில் தடம் புரண்டு தீப்பிடித்தது.
இந்நிலையில், “தீ அணைக்கப்பட்டு, மீட்புப் பணிகள் நடைபெற்று வருவதாக” என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
