
இந்தியா வர முடியாது – பங்களாதேஷ் அணியின் கோரிக்கையை நிராகரித்த சர்வதேச கிரிக்கெட் சபை
டி20 உலகக் கிண்ணத்தில் பங்களாதேஷ் அணியின் போட்டிகளை இலங்கைக்கு மாற்ற அந்நாட்டு கிரிக்கெட் சபை உத்தியோகபூர்வமாக கோரிக்கை விடுத்துள்ளபோதும் குறித்த போட்டிகளை இந்தியாவிலேயே நடத்த சர்வதேச கிரிக்கெட் சபை உத்தேசித்துள்ளது.
பங்களாதேஷ் அணி விளையாடும் போட்டிகளை இந்தியாவின் சென்னை அல்லது திருவனந்தபுரத்தில் நடத்த சர்வதேச கிரிக்கெட் சபை ஆலோசனைகளை நடத்தி வருகிறது.
சர்வதேச கிரிக்கெட் சபைக்கு இரண்டு முறை கடிதங்களை அனுப்பிய பங்களாதேஷ் கிரிக்கெட் சபை, பாதுகாப்பு காரணங்களுக்காக இந்தியாவில் இருந்து போட்டிகளை இலங்கைக்கு மாற்ற வேண்டும் என கோரியது.
இரு நாடுகளுக்கும் இடையே நிலவும் அரசியல் முறுகல் மற்றும் பங்களாதேஷ் வீரர் முஸ்தபிசுர் ரஹ்மானை இந்திய பிரீமியர் லீக்கில் இருந்து நீக்கியம் உள்ளிட்ட காரணங்களால் இந்த கோரிக்கையை பங்களாதேஷ் கிரிக்கெட் சபை விடுத்திருந்தது.
என்றாலும், இறுதிக்கட்டத்தில் போட்டி அட்டவணையில் மாற்றங்களை மேற்கொள்வது கடினமானதென சர்வதேச கிரிக்கெட் சபையில் ஆலோசிக்கப்பட்டுள்ளதால் குறித்த போட்டிகளை வேறு மாநிலங்களில் நடத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் பெப்ரவரி 7 ஆம் திகதி ஆரம்பமாகும் டி20 உலகக் கிண்ணத்தின் போட்டி அட்டவணைப்படி பங்களாதேஷ் அணி தனது முதல் மூன்று குழுநிலைப் போட்டிகளை கொல்கத்தாவிலும் இறுதிப் போட்டியை மும்பையிலும் விளையாட உள்ளமை குறிப்பிடத்தக்கது.
