
கிழக்கு மாகாண அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் பணிப்பகிஷ்கரிப்பு
கிழக்கு மாகாணத்தில் உள்ள அனைத்து வைத்தியசாலைகளிலும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் வேலைநிறுத்தத்தை தொடங்கியுள்ளது.
நிர்வாக மற்றும் நிதி முறைகேடுகள் காரணமாக அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையின் மருத்துவ இயக்குநரை நீக்கக் கோரியும், அந்தப் பதவிக்கு வேறொரு நியமிக்கக் கோரியும் இந்த வேலைநிறுத்தம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி, கிழக்கு மாகாணத்தில் இரண்டு போதனா வைத்தியசாலைகள், 17 ஆதார வைத்தியசாலைகள், 52 பிரதேச வைத்தியசாலைகள் மற்றும் 113 முதன்மை வைத்திய நிலையங்களில் வேலைநிறுத்தம் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை மாவட்டங்களில் உள்ள அனைத்து வைத்தியசாலையின் வைத்தியர்களும் இந்த வேலைநிறுத்தத்தில் பங்கேற்பார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
CATEGORIES இலங்கை
