
ஈரானில் பயன்படுத்துவதற்கான இராணுவ உபகரணங்கள் குறித்து ட்ரம்ப் விளக்கம்
ஈரானில் பயன்படுத்துவதற்கான பல்வேறு வகையான இரகசிய மற்றும் இராணுவ உபகரணங்கள் குறித்து அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பிற்கு விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
பாதுகாப்புத் துறை அதிகாரிகள் இருவரை கோடிட்டு சர்வதேச ஊடகங்கள் இது குறித்து செய்தி வெளியிட்டுள்ளது.
நீண்ட தூர ஏவுகணைத் தாக்குதல்கள் அமெரிக்காவின் விருப்பமாக உள்ளன.
எனினும், பென்டகன் அதிகாரிகள் சைபர் செயல்பாடுகள் மற்றும் உளவியல் பிரச்சார திட்டங்களை முன்வைத்துள்ளதாக அந்த அதிகாரிகள் கூறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈரானில் மூன்று வாரங்களாக நடந்து வரும் அரசாங்க எதிர்ப்புப் போராட்டங்களில் 600 க்கும் மேற்பட்ட போராட்டக்காரர்கள் கொல்லப்பட்டுள்ளதாக உரிமைக் குழுக்கள் தெரிவித்துள்ளன.
இந்நிலையில், ஈரானுடன் வணிக உறவுகளைக் கொண்ட நாடுகளின் பொருட்களுக்கு 25 வீத வரி விதிக்கப்படுவதாக டிரம்ப் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
