
பிரித்தானியாவில் இடம்பெற்ற விபத்தில் நால்வர் உயிரிழப்பு!
பிரித்தானியாவின் போல்டன் (Bolton) பகுதியில் வாடகை கார் ஒன்றும் மற்றுமொரு காரும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில், மூன்று இளைஞர்கள் மற்றும் 50 வயதுடைய கார் ஓட்டுநர் என நால்வர் உயிரிழந்துள்ளனர்.
நேற்று அதிகாலை ‘விகன்’ (Wigan) சாலையில் இந்தத் துயரச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
உயிரிழந்த இளைஞர்கள் 18 முதல் 19 வயதுக்குட்பட்ட முகமது தான்யால், ஃபர்ஹான் படேல் மற்றும் முகமது ஜிப்ராயில் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
மற்றுமொரு காரின் ஓட்டுநரான மஸ்ரோப் அலி என்பவரும் உயிரிழந்துள்ள நிலையில், காயமடைந்த மேலும் ஐந்து பேர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
(Muhammad Danyaal Asghar Ali, Farhan Patel and Mohammed Jibrael Mukhtar – Masrob Ali)
இந்த விபத்து ஒரு “பேரிடர்” என தெரிவித்துள்ள பொலிஸார், சம்பவ இடத்தில் சிதறிக் கிடந்த சிதைவுகளைக் கண்டு அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளதாகத் குறிப்பிட்டுள்ளனர்.
தீயணைப்புப் படையினர் பாதிக்கப்பட்டவர்களை மீட்ட நிலையில், விபத்து குறித்து பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
குறித்த சாலையில் அடிக்கடி விபத்துக்கள் நேர்வதாக அப்பகுதி மக்கள் கவலை வெளியிட்டுள்ளதோடு, பாதுகாப்பு நடவடிக்கைகளை பலப்படுத்துமாறு அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
