
வரலாற்றை அழிக்க முயற்சிகள் நடந்ததாக பிரதமர் மோடி ஆதங்கம்
“காலனித்துவ மனநிலை கொண்டவர்கள்” இந்திய வரலாற்றை அழிக்க முயன்றதாக இந்திய பிரதமர் நரேந்திர மோடி குற்றம் சுமத்தியுள்ளார்.
குஜராத்திற்கு 3 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நிலையில் சோமநாதரில் நடைபெற்ற ‘சௌரிய யாத்திரை’ நிகழ்வில் உரையாற்றிய போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.
இந்தியாவின் புகழ்பெற்ற கடந்த காலத்தை மறைக்கவும், வரலாற்றை மாற்றவும் சிலர் முயன்றதாகவும் பிரதமர் மோடி கூறியுள்ளார்.
சில வரலாற்றாசிரியர்களும் அரசியல்வாதிகளும் பாடப்புத்தகங்களில் வரலாற்று படையெடுப்புகளின் உண்மை முகத்தை மறைத்ததாக கூறிய அவர் சோமநாதர் கோயில் வெறும் கொள்ளைக்காக இடிக்கப்பட்டது என்று மட்டும் கற்பிக்கப்பட்டு, அதனுடன் தொடர்புடைய கொடூரம், வெறுப்பு மற்றும் பயங்கரவாத வரலாறு மறைக்கப்பட்டதாக தெரிவித்தார்.
இதேவேளை, பிரதமரின் சுற்றுப்பயணத்தை முன்னிட்டு மாநிலம் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.
