ஈரானில் அரசாங்கத்திற்கு எதிரான போராட்டங்கள் தீவிரம்

ஈரானில் அரசாங்கத்திற்கு எதிரான போராட்டங்கள் தீவிரம்

ஈரானில் சனிக்கிழமை இரவு அரசாங்கத்தின் கடுமையான அடக்குமுறைக்கு எதிராக ஆயிரக்கணக்கான மக்கள் வீதிகளில் இறங்கிப் போராட்டம் நடத்தினர்.

கடந்த மூன்று நாட்களில் பாதுகாப்புப் படையினரின் நடவடிக்கைகளால் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்ததாகவும், பலர் காயமடைந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதேவேளை, ஈரான் முழுவதும் இணைய சேவை நிறுத்தப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மனித உரிமைகள் அமைப்புகளின் தகவலின்படி, டிசம்பர் 28 முதல் இதுவரை 2,500 க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பணவீக்கம் மற்றும் பொருளாதார சிக்கல்களே இந்த போராட்டங்களுக்கு காரணமாக இருந்தாலும், தற்போது போராட்டக்காரர்கள் ஈரானின் உயர் தலைவர் அயதுல்லா அலி கமேனியின் மதகுரு ஆட்சியை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இந்த போராட்டங்கள் நாட்டின் அனைத்து மாகாணங்களிலும், 100 க்கும் மேற்பட்ட நகரங்களில் முன்னெடுக்கப்பட்டள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )