
கரூர் சம்பவம் – சிபிஐ விசாரணைக்காக விஜய் டெல்லிக்கு பயணம்
கரூர் பெருந்துயரம் தொடர்பான சிபிஐ விசாரணைக்காக நாளை காலை 07 மணிக்கு தவெக தலைவர் விஜய் டெல்லிக்கு செல்கிறார்.
சென்னை விமான நிலையத்தில் இருந்து நாளை காலை 07 மணிக்கு விமானம் மூலமாக விஜய் டெல்லி புறப்படவுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.
கடந்த 6 ஆம் தினதி சம்மன் அனுப்பிய நிலையில் டெல்லி சிபிஐ அலுவலகத்தில் நாளை காலை 11 மணிக்கு விஜய் முன்னிலையாகியுள்ளார்.
மேலும், கரூர் பெருந்துயரம் தொடர்பாக விசாரணைக்காக டெல்லி செல்லும் விஜய்க்கு பாதுகாப்பு வழங்குமாறு டெல்லி பொலிஸாருக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது.
தவெக தலைவர் விஜய் நாளை டெல்லி செல்லும் நிலையில் டெல்லி பொலிஸாருக்கு மின்னஞ்சல் மூலமாக தவெக கடிதம் எழுதியுள்ளது.
தவெக தலைவர் விஜய்க்கு பாதுகாப்பு வழங்குமாறு டெல்லி பொலிஸாருக்கு தவெக நிர்வாகி நிர்மல்குமார் மின்னஞ்சல் மூலமாக கடிதம் அனுப்பியுள்ளது.
CATEGORIES இந்தியா
