
கிளிநொச்சி மாவட்டத்தின் மிகப்பெரிய குளமாகிய இரணைமடுக்குளம் அதன் முழுக் கொள்ளவை அடைந்தது
கிளிநொச்சி மாவட்டத்தில் பலத்த மழை பெய்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
மாவட்டத்தின் மிகப்பெரிய குளமாகிய இரணைமடுக்குளம் அதன் முழுக் கொள்ளவை அடைந்துள்ளது.
மாவட்டத்தின் ஏனைய குளங்களான கனகாம்பிகைக்குளம், கல்மடுக்குளம் என்பன வான்பாய்கின்றன.
கிளிநொச்சியூடாக வட்டக்கச்சி செல்லும் வீதியில் விவசாயப் பண்ணைக்கு அருகில் பனை மரம் ஒன்று மின்சார வயரில் வீழ்ந்து காணப்பட்டதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
இந்நிலையில் அதனை அகற்றும் பணியில் மின்சார சபையினர் ஈடுபட்டனர்.
CATEGORIES இலங்கை
