
ஈரானில் தொடரும் போராட்டம் – இதுவரை 62 பேர் பலி
பொருளாதார நெருக்கடி மற்றும் விலைவாசி உயர்வால் கோபமடைந்துள்ள ஈரானின் மக்கள் அந்நாட்டின் தலைநகர் தெஹ்ரான் உட்பட முக்கிய நகரங்களில் வீதிகளில் இறங்கிப் போராடி வருகின்றனர்.
இந்த போராட்டங்களை கட்டுப்படுத்த பாதுகாப்பு தரப்பினரால் மேற்கொள்ளப்பட்டுவரும் நடவடிக்கைகளால் இதுவரை 62 பேர் உயிரிழந்துள்ளனர்.
உயிரிழப்புகள் அதிகரித்துள்ளதால் மக்களின் கோபம் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளதுடன், போராட்டங்கள் மேலும் வலுப்பெற்றுள்ளன.
மக்கள் போராட்டம் வலுப்பெற்றுள்ளதால் ஈரான் மத்திய வங்கியின் ஆளுநரான முகமது ரெசா ஃபர்சின் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
அமெரிக்காவின் பொருளாதாரத் தடை, பணவீக்கம், அண்மையில் அறிமுகப்படுத்தப்பட்ட பெற்றோல் விலை மாற்றம் ஆகியவையே ஈரானில் ஏற்பட்டுள்ள நெருக்கடிக்கு முக்கியக் காரணங்களாகும் என சர்வதேச பொருளாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
