ஜன நாயகன் வழக்கு விசாரணையில் திருப்பம்!! மேம்முறையீடு செய்ய முடிவு

ஜன நாயகன் வழக்கு விசாரணையில் திருப்பம்!! மேம்முறையீடு செய்ய முடிவு

ஜனநாயகன் படம் தணிக்கைக்கு அனுமதி அளித்த உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்பட உள்ளதாக தணிக்கை குழு அறிவித்துள்ளது.

இந்நிலையில், மனுவாக தாக்கல் செய்தால் அதனை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளவுள்ளதாக உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், திங்கள் கிழமை மேல்முறையீடு மனுவை விசாரிக்க தணிக்கை குழு கோரிக்கை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ஜனநாயகன் திரைப்படத்திற்கு தணிக்கை சான்றிதழ் வழங்குவதில் தாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் இன்று வெளியாகவிருந்த படம் திடீரென ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஜனநாயகன் படத்திற்கு U/A தணிக்கை சான்றிதழ் வழங்க உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த வழக்கில் ஜனநாயகன் தரப்பு வைத்த சில முக்கியமான வாதங்கள் வழக்கு வெற்றிபெற காரணமாக அமைந்தது.

எவ்வாறாயினும், உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்பட உள்ளதாக தணிக்கை குழு அறிவித்துள்ளது.

KVN தயாரிப்பு நிறுவனம் தயாரித்துள்ள ஜனநாயகன் படத்தை 5,000 திரையரங்குகளில் இந்தப் படத்தை வெளியிட திட்டமிட்டிருந்தது.

படம் வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளமையால் பெருமளவில் நிதி இழப்பீடு ஏற்படும் என KVN தயாரிப்பு நிறுவனம் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி தெரிவித்திருந்தார்.

 

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )