குரங்கு பாதுகாக்கப்பட வேண்டிய வனவிலங்கு அல்ல – நாமல் கருணாரத்ன
கால்நடைகளால் ஏற்படும் சேதத்திலிருந்து பயிர்களைப் பாதுகாப்பதற்கு விவசாயிக்கு எந்தவிதமான நடவடிக்கைகளும் எடுத்தபற்கு தடைகள் இல்லை என விவசாய பிரதி அமைச்சர் அமன்ய நாமல் கருணாரத்ன தெரிவித்துள்ளார்.
பொல்பித்திகம பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்ற அபிவிருத்திக் குழுக் கூட்டத்திலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
இந்நாட்டின் முக்கிய ஏற்றுமதி பயிராக இருந்த தென்னைக்கு குரங்குகளால் ஏற்பட்ட சேதத்தை அளவிடமுடியாது. கால்நடைகளால் ஏற்படும் சேதத்திலிருந்து பயிரை காக்க விவசாயிக்கு எந்தத் தடையும் இல்லை.
குரங்கு வனவிலங்குகளில் பாதுகாக்கப்பட்ட வேண்டிய விலங்கு அல்ல என்பதை வனஜீவி ஆய்வாளர்களும் ஏற்றுக்கொள்கிறனர் என்றும் பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன தெரிவித்துள்ளார்.