500 மில்லியன் ரூபாவுக்கும் அதிக பெறுமதியான போதைப்பொருட்களுடன் 03 இந்தியபிரஜைகள் கைது

500 மில்லியன் ரூபாவுக்கும் அதிக பெறுமதியான போதைப்பொருட்களுடன் 03 இந்தியபிரஜைகள் கைது

பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் சுமார் 500 மில்லியன் ரூபாவுக்கும் அதிக பெறுமதியான குஷ் ரக போதைப்பொருட்களுடன் இந்தியப் பிரஜைகள் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்கள் தாய்லாந்தின் பேங்கொக் (Bangkok) நகரிலிருந்து ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்குச் சொந்தமான UL 403 என்ற விமானம் மூலம் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.

விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் மேற்கொண்ட சோதனையின் போது சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன்போது சுமார் 50 கிலோகிராம் நிறையுடைய போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )