
வெனிசுலாவில் அரசியலில் பதற்றம்- ரோட்ரிக்ஸ் பதவியேற்புக்கு முன் ட்ரம்ப் கடும் எச்சரிக்கை
வெனிசுலாவின் புதிய தலைவரான டெல்சி ரோட்ரிக்ஸ், சரியான முடிவுகளை எடுக்காவிட்டால், கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரித்துள்ளார்.
தி அட்லாண்டிக் நாளிதழுக்கு அளித்த பேட்டியிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
வெனிசுலாவைப் பொறுத்தவரை, தற்போதைய நிலையை விட ஆட்சி மாற்றம் சிறந்ததாக இருக்கும் என்றும் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, நிக்கோலஸ் மதுரோவின் துணைத் தலைவராக இருந்த டெல்சி ரோட்ரிக்ஸ், தனது முதல் அமைச்சரவைக் கூட்டத்தில் ட்ரம்பிடம் அமைதிக்கான வேண்டுகோளை விடுத்தார்.
“எங்கள் மக்கள் மற்றும் பிராந்தியம் அமைதி மற்றும் உரையாடலுக்குத் தகுதியானவர்கள்” எனவும் கூறினார்.
அமெரிக்க வான்வழித் தாக்குதல்களுக்குப் பிறகு வெனிசுலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோ தனது மனைவியுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவர் நியூயோர்க் நீதிமன்றத்தில் இன்று ஆஜராவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மதுரோ மீது போதைப்பொருள் கடத்தல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. ஆனாலும் தன்மீதான குற்றச்சாட்டுக்களை அவர் மறுத்துள்ளார்.
இதேவேளை,அமெரிக்கா வெனிசுலாவுடன் அல்ல, போதைப்பொருள் கடத்தல் அமைப்புகளுக்கு எதிராகவே போராடி வருவதாக அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் மார்கோ ரூபியோ தெரிவித்துள்ளார்.
