
பிரித்தானியாவில் செலவு செய்வதை குறைத்துள்ள ஏழைகள்
2024ஆம் ஆண்டில் தொழிற்கட்சி பிரித்தானியாவில் ஆட்சியமைத்ததிலிருந்து, ஏழை மக்கள் அத்தியாவசிய விடயங்களுக்காக செலவு செய்தல் 2.1 சதவீதம் குறைந்துள்ளதாக Retail Economics என்னும் அமைப்பு வெளியிட்டுள்ள தரவுகள் தெரிவிக்கின்றன.
அதே நேரத்தில், செல்வந்தர்களின் வருமானம், 10.3 சதவீதம் அதிகரித்துள்ளதாகவும் தரவுகள் தெரிவிக்கின்றன.
இந்த தரவுகள் அரசாங்கத்துக்கு மேலும் நெருக்கடியை உருவாக்கும் சூழலை ஏற்படுத்தியுள்ளது.
இவ்வாண்டு பிரித்தானிய மக்களின் வாழ்க்கைச் செலவு அதிகரிக்கும் எதிர்க்கட்சிகளின் பிரதிநிதிகளும், தொழிற்சங்க தலைவர்களும் தெரிவித்திருந்ததுடன், ஐரோப்பிய ஒன்றியத்துடனான உறவை மீண்டும் வலுப்படுத்துவதன் அவசியத்தையும் எடுத்துரைத்திருந்ததன் பின்புலத்திலேயே தற்போது ஏழை மக்கள் செலவு செய்வது குறைந்துள்ளதாக தரவுகளும் வெளியாகி வருகின்றன.
TAGS பிரித்தானியா
