
இங்கிலாந்தின் சில பகுதிகளுக்கு பனி பொழிவு குறித்து அம்பர் எச்சரிக்கை
இங்கிலாந்தின் சில பகுதிகளில் பனி பொழிவுக்கான வானிலை எச்சரிக்கைகளை மஞ்சள் நிறத்தில் இருந்து அம்பர் நிறத்திற்கு வானிலை முன்னறிவிப்பாளர்கள் மேம்படுத்தியுள்ளனர்.
2026 ஆம் ஆண்டுக்கான குளிர்கால தொடக்கத்தை மக்கள் எதிர்கொண்டுள்ளதால், ஏனைய பகுதிகளில் மஞ்சள் எச்சரிக்கைகள் நடைமுறையில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்காட்லாந்தின் சில பகுதிகளில் கடும் பனிப்பொழிவுக்கான அம்பர் எச்சரிக்கைகள் வானிலை அலுவலகத்தால் வெளியிடப்பட்டுள்ளன.
வெள்ளிக்கிழமை நண்பகல் முதல் சனிக்கிழமை நண்பகல் வரை இந்த எச்சரிக்கை நடைமுறையில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆம்பர் எச்சரிக்கைகளில் உள்ள பகுதிகளில் ஆங்கஸ், பெர்த் மற்றும் கின்ரோஸ், அபெர்டீன், அபெர்டீன்ஷயர், மோரே மற்றும் ஹைலேண்ட்ஸ் ஆகியவை அடங்கும்.
மேலும், வடக்கு ஸ்காட்லாந்தின் சில பகுதிகளுக்கு பனிப்பொழிவு இடையூறுகளை ஏற்படுத்தக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறைந்த மட்டங்களில் சுமார் 10-20 செ.மீ பனிப்பொழிவு இருக்க வாய்ப்புள்ளது, உயரமான நிலங்களில் 30-40 செ.மீ பனிப்பொழிவு ஏற்பட வாய்ப்புள்ளது.
அதே நேரத்தில் காற்று தற்காலிக பனிப்புயல் நிலைமைகளுக்கு வழிவகுக்கும் என்று வானிலை அலுவலகம் தெரிவித்துள்ளது.
ரயில் மற்றும் விமானப் பயணங்களில் சில தாமதங்கள் மற்றும் ரத்துகள் ஏற்பட வாய்ப்புள்ளது.
அத்துடன், மின்வெட்டு மற்றும் சாலைகளில் இடையூறுகள் ஏற்பட வாய்ப்புள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், செஸ்டர், கிரேட்டர் மான்செஸ்டர், லண்டன் மற்றும் கென்ட் வரை இங்கிலாந்து மற்றும் வேல்ஸின் பெரும் பகுதிகளில் வெள்ளிக்கிழமை பனி மற்றும் பனிக்கட்டிக்கான மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக வடக்கு வேல்ஸ் மற்றும் வடமேற்கு இங்கிலாந்தின் சில பகுதிகளில் உயரமான பகுதிகளில், 5 செ.மீ வரை பனிப்பொழிவு ஏற்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், பிரித்தானிய சுகாதாரப் பாதுகாப்பு நிறுவனம் இந்த ஆண்டின் தொடக்கத்திற்கான சுகாதார எச்சரிக்கைகளை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
