
நயினாதீவு விகாராதிபதி தையிட்டிக்கு விஜயம்
நயினாதீவு ரஜமகா விகாரையின் விகாராதிபதி நவதகல பதுமகீர்த்தி திஸ்ஸநாயக்க தலைமையிலான பௌத்த பிக்குகள் இன்று (2) தையிட்டி விகாரை காணிக்கு விஜயம் செய்துள்ளனர்.
இவ்வாறு விஜயம் செய்த குழுவினர் அங்குள்ள காணி உரிமையாளர்கள் மற்றும் பொது மக்களுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டனர்.
குறித்த விகாரைக்கு ஒதுக்கப்பட்ட காணி இருந்தும், புதிதாக அமைக்கப்பட்டுள்ள விகாரையானது தனியார் காணிகளை சுவீகரித்து சட்டவிரோதமாக கட்டப்பட்டுள்ளதாக நயினாதீவு ரஜமகா விகாரையின் விகாராதிபதி தெரிவித்துள்ளார்.
மக்களின் காணி மக்களுக்கே வழங்கப்பட வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

