
டி20 உலகக் கிண்ணம் – தற்காலிக அணியை அறிவித்தது அவுஸ்திரேலியா
இருபதுக்கு 20 உலகக் கிண்ண தொடருக்காக மிட்செல் மார்ஷ் தலைமையிலான தற்காலிக அணியை அவுஸ்திரேலியா இன்று (1) அறிவித்துள்ளது.
அவுஸ்திரேலிய அணியில் பல வீரர்கள் காயமடைந்துள்ளதால், தற்காலிக அணியே அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, காயங்களிலிருந்து மீண்டு வரும் பெட் கம்மின்ஸ், டிம் டேவிட் மற்றும் ஜோஷ் ஹேசில்வுட் உள்ளிட்ட 15 வீரர்கள் கொண்ட அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
அணியை அறிவித்த அவுஸ்திரேலிய தேர்வுக்குழுத் தலைவர் ஜோர்ஜ் பெய்லி, காயமடைந்த வீரர்கள் குணமடைந்து வருவதாகவும், உலகக் கிண்ண தொடருக்கான சரியான நேரத்தில் அவர்கள் உடல் தகுதி பெறுவார்கள் என்றும் கூறினார்.
இருப்பினும், அவுஸ்திரேலிய வேகப்பந்து வீச்சு அணியின் முக்கிய துருப்புச் சீட்டான மிட்செல் ஸ்டார்க் சர்வதேச இருபதுக்கு 20 கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றதிலிருந்து, அவருக்குப் பதிலாக இடது கை வேகப்பந்து வீச்சாளர் தேர்வு செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ஸ்பென்சர் ஜோன்சனும் காயமடைந்துள்ளார், அதன் காரணமாக சேவியர் பார்ட்லெட் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
அறிவிக்கப்பட்டுள்ள தற்காலிக அணி விபரம்..
மிட்செல் மார்ஷ் (தலைவர்), சேவியர் பார்ட்லெட், கூப்பர் கோனோலி, பெட் கம்மின்ஸ், டிம் டேவிட், கேமரூன் கிரீன், நேதன் எல்லிஸ், ஜோஷ் ஹேசில்வுட், டிராவிஸ் ஹெட், ஜோஷ் இங்கிலிஸ், மேத்யூ குஹ்னேமன், கிளென் மேக்ஸ்வெல், மேத்யூ ஷார்ட், மார்கஸ் ஸ்டோய்னிஸ், எடம் சாம்பா
