
நிறுவனங்கள் சிலவற்றுக்கு விடுக்கப்பட்ட குண்டு மிரட்டல்கள்; விசாரணை ஆரம்பம்
அரச நிறுவனங்கள் சிலவற்றுக்கு விடுக்கப்பட்ட குண்டு மிரட்டல்கள் குறித்து விசாரணை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
குண்டு மிரட்டல்கள் குறித்த மின்னஞ்சல்கள் கண்டி மாவட்டச் செயலகம், பூஜாப்பிட்டிய, நாவலப்பிட்டி மற்றும் பஸ்பாகே கோரல பிரதேச செயலகங்கள் மற்றும் டிசெம்பர் 26 அன்று கத்தார் ஏர்வேஸ் விமானம் ஆகியவற்றுக்கு வந்ததாக அமைச்சர் குறிப்பிட்டார் நாட்டில் பொது அமைதியின்மையை ஏற்படுத்தும் முயற்சியாக சந்தேகிக்கப்படும் இந்தச் சம்பவங்கள் தொடர்பில் பொலிஸ் சைபர் குற்றப் புலனாய்வுப் பிரிவால் விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் கூறியுள்ளார். .
