
ஊழல், மோசடிகளுக்கு முடிவுகட்டுவதாலேயே என்பிபி அரசுக்கு எதிராக தீய சக்திகள் பிரச்சாரம்
ஊழல், மோசடியற்ற வழியில் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் பயணிப்பதாலேயே அதனை கவிழ்ப்பது தொடர்பில் தீய சக்திகள் கதை பரப்பி வருகின்றன என்று அமைச்சர் கேடி லால்காந்த தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
“ ஆட்சி அதிகாரத்தை இழந்து தவிக்கும் தரப்பினர் தேசிய மக்கள் சக்தியின் பொருளாதார மேம்பாடு மற்றும் ஜனநாயக வழியிலான பயணம் தொடர்பில் கவலயடைந்துள்ளனர்.
அடுத்தவர்களின் ஊழைப்பை சுரண்டி சுகபோக வாழ்க்கை வாழ முடியாத நிலையும் காணப்படுகின்றது.
எனவே, எமது பயணத்தை குழப்புவதற்கு அத்தரப்பினர் முயற்சிக்கின்றனர். இந்த நாசகார செயலுக்கு நாசகார ஊடகங்களும் துணை நிற்கின்றன.
மக்கள் ஆணைக்கு எதிராக செயல்பட்ட அரசாங்கங்களுக்கு மக்கள் தக்க பாடம் புகட்டினர். அதேபோல மக்களை குழப்பும் வகையில் செயல்படும் ஊடகங்களுக்கும் மக்கள் சிறந்த பதிலை வழங்குவார்கள்.
மக்கள் சக்திக்கு முன்னால் வேறு சக்திகள் தாக்கு பிடித்து நிற்க முடியாது.
ஊழல், மோசடி அற்ற பயணம் காரணமாகவே தேசிய மக்கள் சக்திக்கு எதிராக சிலர் செயல்படுகின்றனர். அரசாங்கம் கவிழும் என்றெல்லாம் கதைகளை பரப்பி வருகின்றனர்.” – என்றார் அமைச்சர் லால்காந்த.
