சாந்தி, சமாதானம் வேண்டி மலையக ஆலயங்களில் விசேட புத்தாண்டு பூஜைகள்

சாந்தி, சமாதானம் வேண்டி மலையக ஆலயங்களில் விசேட புத்தாண்டு பூஜைகள்

மலர்ந்துள்ள 2026ஆம் ஆண்டு நாட்டுக்கும் வீட்டுக்கும் சாந்தி, சமாதானம் மற்றும் சகவாழ்வைத் தரவேண்டி மலையக இந்து ஆலயங்களில் இன்று அதிகாலை விசேட புத்தாண்டு பூஜைகள் இடம்பெற்றன.

நுவரெலியா மாவட்டத்தின் மிகவும் புகழ்பெற்ற ஆலயங்களில் ஒன்றான ஹட்டன் ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார் ஆலயத்தில், புத்தாண்டை முன்னிட்டு விசேட வழிபாடு நடைபெற்றது.

இதன்போது விநாயகர் வழிபாடு, விசேட அலங்கார பூஜைகள் மற்றும் சூரிய, சந்திர வழிபாடுகள் பக்திப்பூர்வமாக நடத்தப்பட்டன.

நாட்டிற்கும் நாட்டு மக்களுக்கும் ஏற்பட்டுள்ள இடர்கள் நீங்கி, இந்தப் புத்தாண்டு இனிய ஆண்டாக அமைய வேண்டும் என இதன்போது விசேட பிரார்த்தனைகள் முன்னெடுக்கப்பட்டன.

ஹட்டன் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பிரதேசங்களைச் சேர்ந்த பெருமளவான பொதுமக்கள் இந்த வழிபாடுகளில் கலந்துகொண்டனர்.

ஆலயத்தின் பிரதம குரு சிவ ஸ்ரீ சற்குண சன்முகதார குருக்கள் தலைமையில் இந்த விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெற்றன.

 

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )