
ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவின் மகன் நீதிமன்றத்தில் முன்னிலை
முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவின் மகன் வத்தளை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார்.
பொலிஸ் நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் அவர் நேற்று (30) கைது செய்யப்பட்டார்.
சதொச நிறுவனத்திற்குச் சொந்தமான லொறி ஒன்றையும் மேலும் சில வாகனங்களையும் முறைகேடாகப் பயன்படுத்தியமை தொடர்பிலேயே அவர் கைது செய்யப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
CATEGORIES இலங்கை
