யாழ்ப்பாணத்தில் போதைப்பொருளுடன் நல்லூர் பிரதேச சபை உறுப்பினர் கைது

யாழ்ப்பாணத்தில் போதைப்பொருளுடன் நல்லூர் பிரதேச சபை உறுப்பினர் கைது

யாழ்ப்பாணத்தில் 04 கிலோகிராம் நிறையுடைய கஞ்சா போதைப்பொருளுடன் நல்லூர் பிரதேச சபை உறுப்பினர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாண மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கமைய சங்கிலியன் பூங்காவுக்கு அருகில் இன்று அதிகாலை அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைதானவர் வரணி பகுதியைச் சேர்ந்த நல்லூர் பிரதேச சபை உறுப்பினர் என தெரியவந்துள்ளது.

வெளிநாட்டில் இருந்து வரும் ஒப்பந்தத்துக்கமைய இந்த போதைப்பொருள் கடத்தப்பட்டுள்ளதாக பொலிஸாரின் ஆரம்ப விசாரணையில் தெரியவந்துள்ளது.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )