
யாழ்ப்பாண சர்வதேச கிரிக்கெட் மைதானம்! எம்.ஏ. சுமந்திரன் வெளிப்படுத்திய தகவல்
யாழ்ப்பாணத்தில் சர்வதேச கிரிக்கெட் மைதானத்திற்காக ஒதுக்கப்பட்ட நிலம் பேரிடரின் போது ஏற்பட்ட வெள்ள நீரில் மூழ்கிவிட்டதாக இலங்கை தமிழரசு கட்சியின் பொதுச் செயலாளர் எம்.ஏ. சுமந்திரன் ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளார்.
“நிலம் வெள்ள நீரில் மூழ்கியுள்ளது, சுற்றுச்சூழல் நிபுணர்கள் குறித்த நிலம் கிரிக்கெட் மைதானத்திற்கு ஏற்றதல்ல என்று கூறியுள்ளனர். எனவே, இந்த திட்டத்திற்கு சில ஆட்சேபனைகள் உள்ளன,” என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இலங்கையின் ஏழாவது சர்வதேச கிரிக்கெட் மைதானத்திற்கான அடிக்கல் இந்த ஆண்டு செப்டம்பரில் ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவால் நாட்டப்பட்டுள்ளது.
இந்த மைதானம் 48 ஏக்கர் நிலத்தில் நிர்மாணிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
CATEGORIES இலங்கை
