மியன்மாரில் இராணுவ கவிழ்ப்புக்குப் பிறகு முதல் பொதுத் தேர்தல்

மியன்மாரில் இராணுவ கவிழ்ப்புக்குப் பிறகு முதல் பொதுத் தேர்தல்

மியன்மாரில் இன்று பொதுத் தேர்தல் நடைபெறுகிறது.

2021 ஆம் ஆண்டு ஆங் சான் சூகியின் (Aung San Suu Kyi )ஜனநாயக ரீதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தை மியான்மார் இராணுவம் கவிழ்த்தது. அதன்பிறகு, நாடு இன்று, முதல் பொதுத் தேர்தலை நடத்துகிறது.

330 நிர்வாகப் பிரிவுகளில் மூன்றில் ஒரு பகுதியிலேயே வாக்குப்பதிவு நடைபெறுவதாக கூறப்படுகிறது.

உள்நாட்டுப் போரின் காரணமாக பல பகுதிகளில் வாக்குச்சாவடிகளுக்கு அணுக முடியவில்லையென்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, எதிர்வரும் ஜனவரி 11 மற்றும் 25 ஆகிய திகதிகளில் இரண்டாவது சுற்று வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.

அத்துடன் 65 நிர்வாகப் பிரிவுகளில் வாக்குப்பதிவு இரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )