
பெருவில் சக்தி வாய்ந்த நிலஅதிர்வு
வடக்கு பெருவின் கடற்கரைக்கு அருகில் சக்தி வாய்ந்த நிலஅதிர்வு பதிவாகியுள்ளதாக ஜெர்மன் நிலஅதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலஅதிர்வு சனிக்கிழமை பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும் இந்த நிலஅதிர்வு 10 கிலோ மீற்றர் ஆழத்தில் ஏற்பட்டதாக ஜெர்மன் நிலஅதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
குறித்த நிலஅதிர்வு 5.8 ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, இந்த நிலஅதிர்வால் ஏற்பட்ட உயிர் மற்றும் பொருட் சேதம் தொடர்பிலா எவ்வித தகவல்களும் இதுவரை வெளியாகவில்லையென சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
