
தமிழர்கள் மட்டுமே வாக்களித்தால் போதும் – சீமான்
தமிழர்கள் மட்டுமே வாக்களித்தால் போதும் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
2026 ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், நாம் தமிழர் கட்சியின் பொதுக் குழுக் கூட்டம்
சென்னையில் இன்று நடைபெற்றது. இதன்போது கருத்து தெரிவிக்கும் போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
பெரியார் என்பவர்களும் திராவிடர்கள் என்பவர்களும் நாம் தமிழர் கட்சிக்கு வாக்களிக்க வேண்டாம் என்றும் சீமான்
தெரிவித்துள்ளார்.
நாம் தமிழர் கட்சியின் வெற்றிதான் தமிழகத்தின் பிரச்சினைகளுக்கு முடிவுரை எழுதும் என்றும் மக்களாட்சியை ஏற்றுக் கொண்டிருக்கிற
மண்ணில் ஆட்சி அதிகாரமே அனைத்து மாற்றத்துக்கும் அடிப்படையாக இருக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.
தமிழினத்தில் அவ்வப்போது எழும் எழுச்சியை திராவிடர்கள் தன் ஆட்சி அதிகாரத்தால் அடக்கிவிட்டார்கள் என்றும் நாம் தமிழர் கட்சியின்
தலைமை ஒருங்கிணைப்பாளர் மேலும் சீமான் தெரிவித்துள்ளார்.
