
அமெரிக்காவில் கடும் பனிப்பொழிவு
அமெரிக்காவின் மத்திய, மேற்கு மற்றும் வடகிழக்குப் பகுதிகளில் சில நாட்களாக கடும் பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது. பனிப்பொழிவால் விமான சேவைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
பனிப்பொழிவு முன்னெச்சரிக்கை காரணமாக 1,191 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
மேலும் 3,974 விமானங்கள் தாமதமாகி உள்ளன. நியூயார்க், சிகாகோவில் அதிகளவில் விமான சேவைகள் இவ்வாறு ரத்து செய்யப்பட்டுள்ளன.
இதனால் பயணிகள் பெரும் சிரமத்துக்கு உள்ளாகியுள்ளனர்.
TAGS பனிப்பொழிவு
