
ஊடக அடக்குமுறை குற்றச்சாட்டு: அரசு முற்றாக நிராகரிப்பு
“ ஊடகங்களுக்கு அச்சுறுத்தல் விடுக்கும் வகையில் அரசாங்கம் செயல்படவில்லை.” என்று ஊடகத்துறை அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ இன்று (26) தெரிவித்தார்.
“ சில ஊடகங்கள் மற்றும் சமூகவலைத்தளங்கள் திட்டமிட்ட அடிப்படையில் திரிவுபடுத்தப்பட்ட செய்திகளை பரப்புகின்றன. இவற்றுக்கு எதிராக சாதாரண சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்கப்படும். இதுவே மக்களின் கோரிக்கையாகவும் உள்ளது.” எனவும் அமைச்சர் கூறினார்.
போலியான செய்திகளால் நாட்டின் சுகாதாரம்மீதான நம்பிக்கை சீர்குலையக்கூடும்.
அதேபோல தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படக்கூடும் எனவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
எனவே, இப்படியான செயலுக்கு எதிராக சாதாரண சட்டத்தை செயல்படுத்துவது அடக்குமுறை அல்ல எனவும் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ மேலும் குறிப்பிட்டார்.
TAGS நளிந்த ஜயதிஸ்ஸ
