
கண்டி மாவட்ட செயலகத்தில் வெடிகுண்டு பீதி : இதுவரை எந்த வெடிபொருட்களும் கிடைக்கவில்லை
வெடிகுண்டு மிரட்டலை தொடர்ந்து கண்டி மாவட்ட செயலகத்தில் இன்று (26) சிறப்பு தேடுதல் நடவடிக்கை தொடங்கப்பட்டது.
இருப்பினும் இதுவரை எந்த வெடிபொருட்களும் கண்டுபிடிக்கப்படவில்லை என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
செயலக வளாகத்திற்குள் ஐந்து இடங்களில் வெடிகுண்டுகள் மறைத்து வைக்கப்பட்டுள்ளதாக கண்டி மாவட்ட செயலாளரின் அதிகாரப்பூர்வ மின்னஞ்சல் முகவரிக்கு கிடைத்த மின்னஞ்சலைத் தொடர்ந்து இந்த தேடுதல் நடவடிக்கை தொடங்கியது.
அதன்படி, கண்டி பொலிஸ் நிலைய அதிகாரிகள் குழு சம்பவம் குறித்து விசாரணையைத் தொடங்கியுள்ளது.
பொலிஸ் K9 பிரிவு, விசேட அதிரடிப்படை (STF) வெடிகுண்டு செயலிழப்பு பிரிவு மற்றும் இலங்கை இராணுவ வெடிகுண்டு செயலிழப்பு பிரிவு ஆகியவற்றின் உதவியுடன் தேடுதல் தொடர்ந்து இடம்பெற்று வருகிறது.
