கிறிஸ்துமஸ் தினத்தன்று இங்கிலாந்தின் சில பகுதிகளுக்கு வானிலை எச்சரிக்கை!

கிறிஸ்துமஸ் தினத்தன்று இங்கிலாந்தின் சில பகுதிகளுக்கு வானிலை எச்சரிக்கை!

கிறிஸ்துமஸ் தினத்தன்று இங்கிலாந்தின் சில பகுதிகளுக்கு வானிலை மற்றும் குளிர் காற்று சுகாதார எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளன.

இதனால், பனிப் பொழிவுடனான வெள்ளை கிறிஸ்துமஸ் தினத்தை எதிர்பார்ப்பவர்கள் ஏமாற்றமடைய வாய்ப்புள்ளது என்றும் வானிலை முன்னறிவிப்பாளர்கள் கூறியுள்ளனர்.

வியாழக்கிழமை மாலை 6 மணி முதல் டிசம்பர் 27 ஆம் திகதி நண்பகல் வரை தென்மேற்கு இங்கிலாந்துக்கு மஞ்சள் குளிர் சுகாதார எச்சரிக்கை வெளியிடப்பட்டுள்ளதாக நாட்டின் சுகாதார பாதுகாப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதனிடையே, கிறிஸ்துமஸ் தினத்தன்று அதிகாலை 4 மணி முதல் இரவு 11.59 மணி வரை இதேபோன்ற நிலை வேல்ஸின் பெரும்பகுதியை பாதிக்கும் என்று கூறி மஞ்சள் வானிலை எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

குறைந்த வெப்பநிலை சுகாதாரம் மற்றும் சமூக பராமரிப்பு சேவைகளில் சிறிய தாக்கங்களை ஏற்படுத்தக்கூடும் என்றும் இங்கிலாந்தின் சுகாதார பாதுகாப்பு நிறுவனம் கூறியுள்ளது.

கிறிஸ்துமஸ் தினத்தன்று காற்று மிகவும் வலுவாகவும் வீசும் என்றும், சில கடற்கரைகள் மற்றும் முக்கிய மலைகளின் மேற்கில் மணிக்கு 45-55 மைல் வேகத்திலும், 55-65 மைல் வேகத்திலும் காற்று வீசக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )