
ஆப்கானிஸ்தானின் கடைசி திரையரங்கமும் இடிக்கப்பட்டது!
ஒரு காலத்தில் ஆப்கானிஸ்தானின் கலாச்சார முகமாக இருந்த கடைசி திரையரங்கம், ஒரு ஷாப்பிங் மாலுக்கு வழிவகுக்க இடிக்கப்படுகிறது.
1960களில் இருந்து பல்வேறு ஆட்சிகளின் போதும், நாட்டில் ஆட்சியைக் கைப்பற்றிய இரண்டு தாலிபான் ஆட்சிகளின் போதும் காபூலின் கலாச்சார மற்றும் கலை பாரம்பரியத்தின் ஒரு பகுதியாக இருந்த திரையரங்கை இடித்து வருகின்றனர்.
இந்த திரையரங்கம் 2021 முதல் பிரச்சாரத் திரைப்படங்களைத் திரையிடுவதற்காக மட்டுமே செயல்பட்டு வந்தது.
இருப்பினும், பொருளாதார ஆதாயத்திற்காக நிலத்தைப் பயன்படுத்தும் திட்டத்தின் ஒரு பகுதியாக தலிபான் அரசாங்கம் திரையரங்கை இடித்துத் தள்ளினர்.
இங்கு ஒரு புதிய எட்டு மாடி ஷாப்பிங் மால் கட்டப்படவுள்ளது.
1960 ஆம் ஆண்டு திறக்கப்பட்ட இந்த திரையரங்கம், பாலிவுட் படங்களைத் திரையிடுவதற்கான ஒரு பிரபலமான இடமாக இருந்தது. அந்த நேரத்தில், காபூல் மத்திய ஆசியாவின் பாரிஸ் என்று அழைக்கப்பட்டது.
3.5 மில்லியன் டொலர் செலவில் கட்டப்படும் இந்த ஷாப்பிங் மாலில் 300 கடைகள் இருக்கும் என்றும், உணவகங்கள் மற்றும் ஒரு மசூதி இருக்கும் என்றும் காபூல் நகராட்சி அறிவித்துள்ளது.
தற்போதைய வெளிநாட்டுத் தடைகள் காரணமாக, நாடு மற்ற நாடுகளிடமிருந்து நிதி உதவி அல்லது முதலீடுகளைப் பெறவில்லை. எனவே, தாலிபான்கள் இப்போது வணிகத்தில் ஆர்வமுள்ளவர்களுக்கு நிலத்தை வழங்கி வருகின்றனர்.
இதற்கிடையில், நாட்டை விட்டு வெளியேறிய பலர் திரும்பி வருவதால், நாடு பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்கிறது.
இதற்கிடையில், சினிமா அரங்கில் உள்ள உபகரணங்கள் அழிக்கப்படாது. பின்னர் பயன்படுத்துவதற்காக அதை வைத்திருப்பதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.
இருப்பினும், சினிமா அரங்கம் இல்லாததால் கட்டிடம் பயன்படுத்த முடியாததாகிவிடாமல் தடுக்கவே புதிய மால் கட்டப்படுவதாக அவர்கள் கூறுகிறார்கள்.
நாட்டின் தேசிய சேனல்கள் வெளிநாட்டு தொடர்களை ஒளிபரப்ப தடை விதித்துள்ளன. யூடியூப்பில் வீடியோக்களைப் பதிவேற்றுவதும் தடை செய்யப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
