தொடர் தோல்வியால் தடுமாறும் இங்கிலாந்து அணி!! ரவி சாஸ்திரி பக்கம் திரும்பும் கவனம்

தொடர் தோல்வியால் தடுமாறும் இங்கிலாந்து அணி!! ரவி சாஸ்திரி பக்கம் திரும்பும் கவனம்

ஆஷஸ் தொடர் முடிவடைந்ததும் இங்கிலாந்து அணியின் பயிற்சியாளர் பிரண்டன் மெக்கல்லம் அந்தப் பதவியில் இருந்து நீக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகி வருகிறது.

இந்நிலையில், இங்கிலாந்து அணியின் தலைமை பயிற்சியாளராக ரவி சாஸ்திரியை நியமிக்க வேண்டும் என கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

அவுஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி ஐந்துப் போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகின்றது.

இந்த தொடரில் ஏற்கனவே மூன்றுப் போட்டிகள் முடிவடைந்த நிலையில், மூன்றிலும் வெற்றிபெற்ற அவுஸ்திரேலியா அணி தொடரை கைப்பற்றியுள்ளது.

இங்கிலாந்து அணியின் இந்த தொடர் தோல்விக்கு பயிற்சியாளர் பிரண்டன் மெக்கல்லமே காரணம் என குற்றச்சாட்டுகளை முன்வைக்கப்பட்டுள்ளன.

பிரண்டன் மெக்கல்லம் இங்கிலாந்து அணியின் பயிற்சியாளராக பொறுப்பேற்ற பின்னர் பேஸ்பால் முறையை கையில் எடுத்தார். இந்த உத்தியால் முதல் 11 போட்டிகளில் 10 போட்டிகளில் இங்கிலாந்து அணி வெற்றிபெற்றது.

எனினும், அந்த உத்தியே தற்போது இங்கிலாந்து அணிக்கு மிகப் பெரிய எதிரியாக மாறியுள்ளது. எதிரணிகள் சுதாகரித்துக்கொண்ட நிலையில், இங்கிலாந்து கையில் எடுத்த உத்தி தோல்வியடைந்தது.

இதன் காரணமாக அடுத்த 33 போட்டிகளில் 16 வெற்றிகளை மட்டுமே பெற்றது இங்கிலாந்து அணி.

முன்னாள் வீரர்கள் முதல் பலரும் இந்த முறையை கைவிட வேண்டும் என்றும் டெஸ்ட் கிரிக்கெட்டை டெஸ்ட் கிரிக்கெட் போல் ஆட வேண்டும் என்று வலியுறுத்தினர்.

எனினும், இதனை அணி நிர்வாகம் காதில் வாங்கியதாக தெரியவில்லை. தற்போது ஆஷஸ் தொடரையும் இழந்துள்ளது.

இந்நிலையிலேயே, பயிற்சியாளர் பிரண்டன் மெக்கல்லம் அந்தப் பதவியில் இருந்து நீக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும், தலைமை பயிற்சியாளராக ரவி சாஸ்திரியை நியமிக்க வேண்டும் என கோரிக்கையும் வலுபெற்றுள்ளது.

இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் மாண்டி பனேசர், அவுஸ்திரேலியாவின் பலவீனத்தை அறிந்த ஒருவருக்குதான் இங்கிலாந்து அணியின் தலைமை பயிற்சியாளர் பதவி கிடைக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்து அணியின் தலைமை பயிற்சியாளராக ரவி சாஸ்திரியை நியமிக்க வேண்டும் என கூறுவேன்.

அவரது தலைமையில்தான் இந்திய அணி இரண்டு முறை ஆஸ்திரேலியாவை அவர்களது மண்ணிலேயே வீழ்த்தி வெற்றி பெற்றது என மாண்டி பனேசர் மேலும் தெரிவித்துள்ளார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )