அவுஸ்திரேலியாவில் நாஜி சின்னங்களை காட்சிப்படுத்திய பிரித்தானிய நாட்டவர் நாடு கடத்தப்படும் அபாயம்

அவுஸ்திரேலியாவில் நாஜி சின்னங்களை காட்சிப்படுத்திய பிரித்தானிய நாட்டவர் நாடு கடத்தப்படும் அபாயம்

அவுஸ்திரேலியாவில் இருந்து பிரித்தானிய நாட்டவர் ஒருவர் நாடு கடத்தப்படும் அபாயத்தை எதிர்கொண்டுள்ளார்.

நாஜி சின்னங்களை காட்சிப்படுத்தியதாகக் கூறி குறித்த நபரின் விசா ரத்து செய்யப்பட்டு நாடு கடத்தப்படுவதை எதிர்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குயின்ஸ்லாந்தில் வசிக்கும் 43 வயது குறித்த நபர், இந்த மாத தொடக்கத்தில் கைது செய்யப்பட்டார்.

நாஜி ஸ்வஸ்திகாவை இடுகையிடவும், நாஜி சார்பு சித்தாந்தத்தை ஊக்குவிக்கவும், யூத சமூகத்திற்கு எதிராக வன்முறைக்கு அழைப்பு விடுக்கவும் சமூக ஊடகக் கணக்கைப் பயன்படுத்தியதாக அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

தற்போது குறித்த நபர் பிரிஸ்பேனில் குடிவரவு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளதாகவும், ஜனவரி மாதம் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படுவார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

யூத எதிர்ப்பு மற்றும் வலதுசாரி தீவிரவாதம் சமீபத்தில் அதிகரித்து வரும் நிலையில், தடைசெய்யப்பட்ட சின்னங்களைப் பயன்படுத்துவதை அவுஸ்திரேலியா பொலிஸார் கடுமையாக்கி வருகின்றனர்.

இந்நிலையில், குறித்த நபர் அவுஸ்திரேலியாவில் தங்குவதற்கு வாய்ப்பு இல்லை” என்று உள்துறை அமைச்சர் டோனி பர்க் தெரிவித்துள்ளார்.

“அவுஸ்திரேலியாவுக்கு விசாவில் வந்த எவரும், இங்கே ஒரு விருந்தினராக இருக்கிறார்கள்” என்று பர்க் இன்று புதன்கிழமை அவுஸ்திரேலிய ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்திடம் தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், தனது விசா ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து பாதிக்கப்பட்டவர் மேல்முறையீடு செய்யலாம்.

மேலும், தானாக முன்வந்து அவுஸ்திரேலியாவை விட்டு வெளியேறலாம் அல்லது நாடு கடத்தப்படும் வரை காத்திருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )