
பொண்டி தாக்குதலை ஆதரித்த நபரின் வீட்டிலிருந்து துப்பாக்கிகள் மற்றும் வெடிமருந்துகள் கண்டெடுப்பு
அவுஸ்திரேலியாவின் பொண்டி தாக்குதல் நடத்தியவர்களுக்கு ஆதரவளிப்பதாக கூறிய நபரின் வீட்டிலிருந்து பொலிஸார் துப்பாக்கிகள் மற்றும் வெடிமருந்துகள் போன்றவற்ளை கண்டெடுத்துள்ளனர்.
இனரீதியான துன்புறுத்தல், தடைசெய்யப்பட்ட ஆயுதம் வைத்திருந்தமை போன்ற பல பகுற்றச்சாட்டுகளும் அந்த நபர் மீது சுமத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் 39 வயதான சந்தேகநபரை இன்றயை தினம் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கடந்த 14 ஆம் திகதியன்று அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரில் உள்ள பிரபலமான பொண்டி கடற்கரைப் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 15 பேர் உயிரிழந்துள்ளமை தொடர்ச்சியாக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்கத்கது.
