
உக்ரைனின் பொதுமக்களை கடத்திச் சென்ற ரஷ்யா
உக்ரைனின் 52 பொதுமக்கள் ரஷ்யாவுக்கு அழைத்துச் செல்லப்பட்டதாக உக்ரைன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
உக்ரைனின் வடகிழக்கு சுமி பிராந்தியத்தில் உள்ள ஹ்ராபோவ்ஸ்கே (Hrabovske) என்ற எல்லை கிராமத்தில் இடம்பெற்ற தாக்குதலின் போதே அந்த மக்கள் அழைத்துச் செல்லப்பட்டதாக கூறப்படுகிறது.
பொதுமக்கள் முதலில் தேவாலயமொன்றிற்குள் சுற்றி வளைக்கப்பட்டதைத் தொடர்ந்து அவர்கள் எல்லையைத் தாண்டி ரஷ்யாவுக்கு அழைத்துச் செல்லப்பட்டதாக
உக்ரைனின் இராணுவ கூட்டுப் படைகளின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார். மேலும் உக்ரைனின் இராணுவத்தினர் 13 பேரும் கைது செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
