கிறிஸ்துமஸ் ஈவ் – இங்கிலாந்தின் ஆயிரக்கணக்கான வீடுகளுக்கு நீர் விநியோகத் தடை

கிறிஸ்துமஸ் ஈவ் – இங்கிலாந்தின் ஆயிரக்கணக்கான வீடுகளுக்கு நீர் விநியோகத் தடை

கிறிஸ்துமஸ் ஈவ் அன்று இங்கிலாந்தின் சில பகுதிகளில் ஆயிரக்கணக்கான வீடுகளுக்கு நீர் விநியோகம் தடைப்படும் அபாயம் காணப்படுவதாக Southern Water நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஹேஸ்டிங்ஸ் (Hastings)மற்றும் அதனை அண்மித்த  பகுதிகளில் உள்ள சுமார் 15,000 பேர் பாதிக்கப்படகூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இன்று பிற்பகலுக்குள் அவர்களுக்கு போத்தலில் அடைக்கப்பட்ட நீர் வழங்கப்படும் என நிறுவனம் கூறியுள்ளது.

கிழக்கு சசெக்ஸ் நகரத்தின் வடக்கே உள்ள ஒரு வனப்பகுதியில், பிரதான நீர் குழாய் சேதமடைந்துள்ளதாக இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

எவ்வாறாயினும் புனரமைப்பு பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக Southern Water நிறுவனம் தெரிவித்துள்ளது.

மேலும் நீரை வீண் விரயம் செய்வதைத் தவிர்த்துக்கொள்ளுமாறு பொது மக்களுக்கு அறிவிறுத்தப்பட்டுள்ளது.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )