
வாழ்க்கைச் செலவு பிரச்சினைக்கு உதவுவதே தனது முன்னுரிமை – கிறிஸ்துமஸ் வாழ்த்து செய்தியில் பிரதமர்
நாடு முழுவதும் பலர் வாழ்க்கைச் செலவில் போராடி வருவதாக பிரதமர் சர் கெய்ர் ஸ்டார்மர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், வாழ்க்கைச் செலவு பிரச்சினைக்கு உதவுவதே தனது முன்னுரிமை என்றும் பிரதமர் தெரிவித்துள்ளார்.
கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியிலேயே பிரதமர் இவ்வாறு கூறியுள்ளார்.
அன்பையும் மிகுதியையும் கொண்டாடும் ஆண்டின் இந்த நேரத்தில், இழப்பு அல்லது கஷ்டம் இன்னும் கடுமையாக உணரப்படலாம்.
“எனவே அயல் வீட்டுக்காரரை அழைத்துப் பேசுங்கள். சிறிது காலமாக நீங்கள் தொடர்பு கொள்ளாத ஒரு நண்பர் அல்லது உறவினரைப் பற்றி விசாரியுங்கள்.
இது மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கிறிஸ்துமஸ் தினத்தன்று பணியில் இருக்கும் தேசிய சுகாதார சேவை ஊழியர்கள், இராணுவ வீரர்கள் மற்றும் அவசர சேவைப் பணியாளர்களுக்கு பிரதமர் நன்றி தெரிவித்தார்.
மேலும், தனிமையில் இருப்பவர்களுக்கு அல்லது தேவைப்படுபவர்களுக்கு உதவ முன்வருவார்கள் எனவும் பிரதமர் அழைப்பு விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதனிடையே, பிரதமர் தனது கிறிஸ்துமஸ் விடுமுறையை பிரதமரின் ஓய்வு இல்லமான செக்கர்ஸில், குடும்பத்தினருடன் கழிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
