இங்கிலாந்தில் அடுத்த 12 மணி நேரத்திற்கு பனிப்பொழிவு – வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

இங்கிலாந்தில் அடுத்த 12 மணி நேரத்திற்கு பனிப்பொழிவு – வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

இங்கிலாந்தில் அடுத்த 12 மணி நேரத்திற்கு பனிப்பொழிவு இருக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதன்படி, மான்செஸ்டர், லங்காஷயர் மற்றும் மேற்கு மற்றும் வடக்கு யார்க்ஷயரின் சில பகுதிகளில் பனிப்பொழிவு இருக்கும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

புதிய வானிலை முன்னறிவிப்புகளின்படி , இங்கிலாந்தின் சில பகுதிகளில் வரும் நாட்களில் பனிப்பொழிவு காணப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இங்கிலாந்தின் முக்கிய ஆறு பகுதிகளில் பனிப்பொழிவு இருக்கும் என்றும் இரண்டு அங்குல ஆழம் வரை பனிப்பொழிவு காணப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

கிரேட்டர் மான்செஸ்டர் , லங்காஷயர் மற்றும் மேற்கு மற்றும் வடக்கு யார்க்ஷயரின் சில பகுதிகள் பாதிக்கப்படக்கூடிய பகுதிகளாகும் .

தெற்கு கும்ப்ரியா மற்றும் மேற்கு கவுண்டி டர்ஹாம் பகுதிகளிலும் பனிப்பொழிவு இருக்கும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

யார்க்ஷயரின் பெரும்பகுதி, ஹம்பர் மற்றும் வடமேற்குப் பகுதிகளில் மைனஸ் நான்கு செல்சியஸ் வெப்பநிலை காணப்படும்.

வடக்கு வேல்ஸிலும் வெப்பநிலை மைனஸ் நான்கு செல்சியஸாக குறையக்கூடும், அதே நேரத்தில் கார்டிஃப் மற்றும் ஸ்வான்சியில் மைனஸ் ஒரு செல்சியஸ் வெப்பநிலையே காணப்படும்.

லண்டன், இங்கிலாந்தின் தென்மேற்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் வெப்பநிலை மைனஸ் இரண்டு செல்சியஸ் முதல் மைனஸ் ஒரு செல்சியஸ் வரை இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )