அம்பலாங்கொடை துப்பாக்கிச் சூட்டு சம்பவம் – ஒருவர் கைது

அம்பலாங்கொடை துப்பாக்கிச் சூட்டு சம்பவம் – ஒருவர் கைது

அம்பலாங்கொடையில் உள்ள  வணிக நிறுவனத்தின் மேலாளர் ஒருவர் சுட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தின் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவால் கொள்ளுப்பிட்டியில் உள்ள ஒரு தங்குமிடத்தை சோதனையிட்டபோது சந்தேகநபர் கைது செய்யப்பட்டார்.

காலியில் அம்பலாங்கொடை நகரத்தில் திங்கட்கிழமை (22) காலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் 47 வயதான ஸ்ரீரன் கோசல டி சில்வா  என்பவர் உயிரிழந்தார்.

ஆரம்பத்தில் துப்பாக்கிதாரி துப்பாக்கிச் சூடு நடத்த முற்பட்ட போது கைத்துப்பாக்கி இயங்காமையினால் அந்த முயற்சி தோல்வியடைந்துள்ளது.

இதனால் துப்பாக்கிதாரி அங்கிருந்து தப்பியோடிய நிலையில் இலக்கு வைக்கப்பட்ட நபர் துப்பாக்கிதாரியை துரத்திச் சென்றுள்ளார்.

இருப்பினும், மிகக் குறுகிய நேரத்தில் வேறொரு துப்பாக்கியுடன் மீண்டும் வந்த துப்பாக்கிதாரி, கோசல டி சில்வா நோக்கிச் துப்பாக்கி பிரயோகத்தை நடத்தியுள்ளார்.

இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். சந்தேகநபர்கள் மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்றிருந்த நிலையில், மோட்டார் சைக்களில் கைவிடப்பட்டிருந்த நிலையில் மீட்கப்பட்டிருந்தது.

இந்நிலையிலேயே, சந்தேகநபர் ஒருவர் கொழும்பில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )