இலங்கையில் தங்கத்தின் விலை மேலும் ரூ.2,000 அதிகரிப்பு

இலங்கையில் தங்கத்தின் விலை மேலும் ரூ.2,000 அதிகரிப்பு

உலக சந்தையில் விலைகள் வேகமாக உயர்ந்து வருவதால் உள்ளூர் சந்தையில் தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது.

இன்று (24) நிலவரப்படி, உலகளவில் தங்கத்தின் விலை அவுன்ஸ் ஒன்றுக்கு 4,500 அமெரிக்க டொலர்களைத் தாண்டி புதிய உச்சத்தை தொட்டுள்ளது.

இலங்கையில், நேற்றைய விலையுடன் ஒப்பிடும்போது தங்கத்தின் விலை ரூ.2,000 அதிகரித்துள்ளது.

அதன்படி, இன்று காலை, கொழும்பு புறக்கோட்டை தங்கச் சந்தையில் 22 கரட் தங்கத்தின் விலை ரூ.327,500 ஆக இருந்தது.

இதற்கிடையே, நேற்று ரூ.352,000 ஆக இருந்த 24 கரட் தங்கத்தின் விலை இன்று ரூ.354,000 ஆக உயர்ந்துள்ளதாக கொழும்பு புறக்கோட்டை தங்கச் சந்தையின் வர்த்தகர்கள் தெரிவித்தனர்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )