கோட்டை பொலிஸில் சரணடைந்த அர்ச்சுனா எம்.பி கைது

கோட்டை பொலிஸில் சரணடைந்த அர்ச்சுனா எம்.பி கைது

கடமையில் இருந்த பொலிஸ் அதிகாரி ஒருவருக்கு அழுத்தம் கொடுத்த சம்பவம் தொடர்பான வழக்கில், நீதிமன்றத்தில் ஆஜராகத் தவறியமைக்காக பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா கோட்டை பொலிஸில் சரணடைந்துள்ளார்.

குறித்த வழக்கு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் நேற்று (23) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, அர்ச்சுனா எம்.பி. நீதிமன்றத்தில் முன்னிலையாகவில்லை. இதனையடுத்து அவருக்கு எதிராக நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்திருந்தது.

நீதிமன்றினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையிலேயே அவர் தற்போது சரணடைந்துள்ளார்.

இந்த நிலையில் அவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )