
நெடுநாள் மீன்பிடிப் படகொன்றிலிருந்து 200 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருள் பறிமுதல்
நெடுநாள் மீன்பிடிப் படகொன்றிலிருந்து சுமார் 200 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருட்கள் கடற்படையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
கடந்த 9 ஆம் திகதி கந்தர பிரதேசத்திலிருந்து 05 மீனவர்களுடன் கடலுக்குச் சென்ற இந்த மீன்பிடிப் படகு, நேற்றைய தினம் (23) கடற்படையினரால் சுற்றிவளைக்கப்பட்டது.
இதன்போது 21 கிலோகிராமிற்கும் அதிகமான ஹெரோயின் மற்றும் 172 கிலோகிராம் ஐஸ் போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
இந்த படகு டிக்கோவிட்ட மீன்பிடித் துறைமுகத்திற்குக் கொண்டுவரப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
