துருக்கியில் விபத்துக்குள்ளான விமானம் – லிபிய இராணுவத் தளபதி உட்பட பேர் பலி

துருக்கியில் விபத்துக்குள்ளான விமானம் – லிபிய இராணுவத் தளபதி உட்பட பேர் பலி

துருக்கியில் விமானமொன்று விபத்துக்குள்ளானதில் லிபிய இராணுவத் தளபதி உட்பட 08 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்த விபத்து அங்காரா நகருக்கு அருகில் இடம்பெற்றதாக கூறப்படுகிறது.

உயிரிழந்தவர்களில் நான்கு சிரேஷ்ட இராணுவ அதிகாரிகள் மற்றும் மூன்று பணியாளர்கள் அட ங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ள்து.

அங்காராவிலிருந்து லிபியாவின் திரிபோலி நோக்கிப் பயணித்த போதே விமானம் விபத்துக்கள்ளாகியுள்ளது.

விமானம் விபத்துக்குள்ளாவதற்கு முன்னதாக, தொழினுட்பக் கோளாறு ஏற்பட்டுள்ளதாக விமானிகள் கட்டுப்பாட்டு அறைக்கு அறிவித்துள்ளனர்.

அதனைத் தொடர்ந்து, விமானத்தின் எரிபொருளை வெளியேற்றிவிட்டு அவசரமாகத் தரையிறக்க அவர்கள் முயற்சி செய்துள்ளனர்.

எனினும், தரையிறங்குவதற்கு முன்னரே விமானம் விபத்துக்குள்ளானதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இரு நாடுகளுக்கும் இடையிலான பாதுகாப்பு ஒத்துழைப்பை மேம்படுத்துவது தொடர்பான உயர்மட்டப் பேச்சுவார்த்தைகளுக்காகவே இராணுவத் தளபதி துருக்கிக்கு விஜயம் மேற்கொண்டிருந்தார்.

லிபிய அரசாங்கம் மூன்று நாள் துக்க தினத்தை அறிவித்துள்ளது.  நாட்டுக்கு ஏற்பட்ட ஈடு செய்ய முடியாத பெரும் இழப்பு எனவும் லிபிய அரசு தெரிவித்துள்ளது.

 

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )