பண்டிகைக் காலத்தை முன்னிட்டு இன்றுமுதல் விசேட ரயில் சேவை

பண்டிகைக் காலத்தை முன்னிட்டு இன்றுமுதல் விசேட ரயில் சேவை

நத்தார் பண்டிகை, பாடசாலை விடுமுறை மற்றும் வருட இறுதியில் காணப்படும் நீண்ட விடுமுறையை முன்னிட்டு மேலதிக ரயில் சேவை ஒன்றை ஈடுபடுத்த ரயில்வே திணைக்களம் திட்டமிட்டுள்ளது.

இதற்கமைய, இன்று (24) பிற்பகல் 3.00 மணிக்கு மருதானையிலிருந்து மாத்தறை நோக்கி விசேட கடுகதி ரயில் ஒன்று பயணிக்கவுள்ளது.

அந்த விசேட ரயில், இம்மாதம் 29 ஆம் திகதி காலை 5.00 மணிக்கு மாத்தறை ரயில் நிலையத்திலிருந்து கொழும்பு கோட்டை நோக்கிப் புறப்பட்டு, காலை 8.30 மணிக்குக் கொழும்பு கோட்டையை வந்தடையத் திட்டமிடப்பட்டுள்ளது.

மேலும், கொழும்பு கோட்டை – காங்கேசன்துறை இடையிலான நகரங்களுக்கிடையிலான ரயில் சேவை எதிர்வரும் 25 மற்றும் 28 ஆம் திகதிகளில் முன்னெடுக்கப்படவுள்ளது.

இந்தப் ரயில் 9 முதலாம் வகுப்பு குளிர்சாதனப் பெட்டிகளைக் கொண்டதாகும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )